தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசியல் மாற்றம் ஏற்படுத்த வா தலைவா வா!' - ரஜினியை அரசியலுக்கு அழைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் - ரஜினி ரசிகர்கள்

நாகப்பட்டினம்: நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

rajini
rajini

By

Published : Oct 31, 2020, 1:37 PM IST

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

நாகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் நேற்று ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று (அக். 31) நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 'வா தலைவா வா' என அதிகாலையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர்களில் "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய வள்ளலே! தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்-அரசியல் மாற்றம் ஏற்பட வா தலைவா வா!" என அச்சிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details