நாகை மாவட்டம் பொய்கைநல்லூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இங்கு பிரசித்திப்பெற்ற கோரக்க சித்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் இங்கு சுனாமி குடியிருப்புப் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்ட சாராய பாக்கெட்டுகள், மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், சித்தர் கோயில், சிவன் கோயில், குடிநீர் பிடிக்கும் இடம், சமுதாயக் கூடம் ஆகிய பகுதிகளில் காலை முதல் இரவு வரையிலும் புதுச்சேரி சாராயத்தை விற்பனை செய்துவருகின்றனர்.
காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு!
நாகை: நாகை அருகே குடியிருப்புப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதனால் அப்பகுதி பெண்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியவில்லை. அப்பகுதிகளில் பெண்கள் நடந்துசென்றால், சாராயம் குடிப்பவர்கள் போதையில் பெண்களை கேலி கிண்டல் செய்கிறார்கள்.
இது குறித்து காவல் துறையிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊர் பொதுமக்கள் தட்டிக்கேட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறி கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி கிராம மக்கள் மனு அளித்தனர்.