தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் நாகப்பட்டினம் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு கிராம மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளையும் எஞ்ஜின்களையும் பயன்படுத்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை, இரட்டை மடிவலை அதிவேக எஞ்ஜின்களை பயன்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 19 கிராம மீனவர்கள் சார்பில் தரங்கம்பாடியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.