கொங்கு மண்டலத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று பண்ணாரி அம்மன் கோயில். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி தினங்களில் இக்கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவது வழக்கம்.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோயில் மூடப்பட்டுள்ளது. பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலில் அம்மனுக்கு நான்கு கால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடி பெருக்கு நாளான இன்று (ஆகஸ்ட் 2) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், பக்தர்கள் யாரும் வராமல் கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.