மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் தியாகராஜன் (27) - பிரவீனா (25) தம்பதி. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கருவுற்ற பிரவீனாவிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் 3 கரு வளர்வது தெரிய வந்துள்ளது.
இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவீனாவை பாதுகாப்பாக கவனித்து வந்தனர். தொடர்ந்து சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தனர். இவ்வாறு ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில், பிரவீனாவிற்கு பிரசவ வலி எடுத்ததை தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.