மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவர் கிராமத்தில், எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.
சீர்காழி அருகே கரை ஒதுங்கிய 4 டன் எடை கொண்ட திமிங்கலம் - whale stranded near sirkazhi
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையாரில் 4 டன் எடை கொண்ட திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறித்து வனத்துறை, கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

whale
இதனிடையே, துறைமுக முகத்துவாரம் அருகே கரையோர பகுதியில் 4 டன் எடை, 12 அடி நீளம்கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில், இன்று (நவம்பர் 17) கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறையினர், கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினர், கடற்கரை பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.