மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் 500 மூட்டை நெல்லை லாரியுடன் கடத்திச் சென்ற கில்லாடி திருடன் கைது செய்யப்பட்டார். இரண்டாவது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, கீழமருதாந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. லாரி ஓட்டுநரான இவர் கடந்த சனிக்கிழமை (ஆக.28) மணல்மேடு கேசிங்கன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 500 நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை சென்று பார்த்தபோது நெல் மூட்டைகளுடன் லாரி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் விஜயகுமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு இதேபோன்று மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நெல் மூட்டைகளுடன் லாரியை கடத்திச் சென்றதும், பின்னர் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.