மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் செங்கல் ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இங்கு பணிபுரிந்த நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சீனிவாசன் என்பவர், நேற்று (ஏப். 17) ஆலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்ட தொழிலாளர்கள், அப்பகுதி மக்கள் அவரை அடித்துக் கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டதாகக் கூறியும், அதற்குக் காரணமான ஆலையின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக் கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்வரை சீனிவாசனின் உடலை எடுக்கப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.