நாகப்பட்டினம் மாவட்டம், கீரைக்கொல்லை தெருவைச் சேர்ந்தவர்கள் கார் ஓட்டுநர் பாலுமகேந்திரன், பெயிண்டர் திரிசங்கு. இவர்கள் இருவருக்கும் குடும்பத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. பாலுமகேந்திரன் நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தனது காரை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மதுபோதையில் அங்கு வந்த திரிசங்கு தான் மறைத்திருந்த அரிவாளால் பாலுவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் பாலு தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் இரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பாலுவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் இருந்த திரிசங்குவை தலையில் காயத்துடன் இரத்தம் சொட்ட சொட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்து அவர் சிகிச்சைக்கு செல்ல மறுத்து காவல் நிலையத்தில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
சுமார் இரண்டு மணி நேரமாக ரகளையில் ஈடுபட்ட அவரிடம் காவலர் பேச்சு வார்த்தை நடத்தி அவசர ஊர்தி வாகனத்தில் ஏற்றி மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் நடந்த வெட்டு குத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உட்கட்சி பூசலில் அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!