மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த சரவணன், கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அரசகுமார் ஆகிய இருவரும் நண்பர்கள்.
சரவணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசகுமாரிடம் 2 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில், தான் கொடுத்த பணத்தை வாங்குவதற்காக அரசகுமாரின் வீட்டிற்கு சரவணன் குடிபோதையில் சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் அரசகுமார் தான் வைத்திருந்த கத்தியால் சரவணனின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சரவணனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல் துறையினர் அரசகுமாரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: உறவினர் பெண்ணால் இளைஞர் கொலை: காவல் துறை விசாரணை!