மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அந்த வகையில் மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர் - Amavasai Tirthavari occasion of Thula Utsavam
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு காவிரியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
அதன்படி நேற்று (அக். 25) ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமி விஸ்வநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் வரை அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு குவியும் வாழ்த்து