தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா வாரியர்ஸுக்குத் தொடர்ந்து உணவு வழங்கிவரும் உணவக உரிமையாளர்! - கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலவச உணவு

நாகை: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினருக்கு ஒருமாத அளவில் இலவசமாக உணவுப் பொருள்களை வழங்கிவருகிறார் உணவக உரிமையாளர் ஒருவர்.

a hotel owner in nagai distribute free food for corona warriors
a hotel owner in nagai distribute free food for corona warriors

By

Published : Apr 20, 2020, 4:28 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் மருத்துவர்கள் மட்டுமின்றி காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள் என பலரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் நாகை, நாகூரில் பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்கள், ஊர்க்காவல்படை காவலர்களுக்கு நாகூரைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ரமேஷ் இலவசமாக கடந்த ஒரு மாத காலமாக காலை சிற்றுண்டி வழங்கிவருகிறார்.

இவர், தமிழ்நாடு தென்மாநில சேவாபாரதி அமைப்போடு இணைந்து நாகை, நாகூரில் பணியாற்றும் 220 துப்புரவுப் பணியாளர்களுக்கும், நாகூர் பகுதியில் பணியாற்றும் 30 ஊர்க்காவல் படை காவலர்களுக்கும் உணவளித்துவருகிறார்.

இவரது இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குமரியில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் சேவா பாரதி அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details