நாகையை அடுத்த மஹாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ். இவர் அதே பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.
சிறுவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது - ஓரின சேர்க்கை
நாகை: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
![சிறுவனுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரன் போக்சோ சட்டத்தில் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4984113-961-4984113-1573063074188.jpg)
இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஜோசப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர் ஒருவனுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இது அந்த மாணவன் வீட்டிற்கு தெரியவந்தது. பின்னர் மாணவனிடம் நடந்ததைக் கேட்டறிந்த குடும்பத்தார் ஜோசப் ராஜை தேடியுள்ளனர்.
இந்நிலையில் நாகை அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்த ஜோசப்பை கண்ட சிறுவனின் உறவினர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து நாகை வெளிப்பாலையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ஜோசப் ராஜை விசாரித்த போலீசார், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.