தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பிடிப்பதில் தகராறு: நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை - mayiladuthurai a engaged girl suicide

தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை  தண்ணீர் பிடிப்பதில் தகராறு  நிச்சயமான பெண் தற்கொலை  தற்கொலை  மயிலாடுதுறை செய்திகள்  மயிலாடுதுறை நிச்சயமான பெண் தற்கொலை  குற்றச் செய்திகள்  water problem  hang  a engaged girl was hang for a water problem  mayiladuthurai news  mayiladuthurai latest news  crime news  mayiladuthurai a engaged girl suicide  suicide
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: நிச்சயமான பெண் தற்கொலை

By

Published : Jun 14, 2021, 2:16 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி, கடைவாசல் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா (26), பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவருக்குக் கடந்த சில நாள்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தண்ணீர் பிடிப்பதற்காக, தனது வீட்டின் அருகில் சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாமா, பிரபுதாஸ் ஆகிய இரண்டு பேரும் தீபாவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தற்கொலைக்குத் தூண்டிய பாமா, பிரபுதாஸ்

தகராறின்போது பாமா, பிரபுதாஸ் ஆகிய இருவரும், “உன்னைப்பற்றி திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாகக் கூறிவிடுவோம்” என மிரட்டியதாகவும், அதனால் மனமுடைந்த தீபா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தீபாவின் தாய் கலாவதி, புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீபாவின் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர் பாமா, பிரபுதாஸ் ஆகிய இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர். பின் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கிரிக்கெட் போட்டியில் பந்தயம்: 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details