மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள பாதாளச் சாக்கடைத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சாக்கடைக் குழாய் உடைந்து, அதன்காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதுவரை 24 முறை மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் பாதாளச்சாக்கடையால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மயிலாடுதுறை ஐயாறப்பர் தெற்கு வீதியில் பாதாளச்சாக்கடை கழிவுநீரேற்று நிலையம் அருகில் இன்று மாலை சாலையில் மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அப்போது சாலையில் ஆள் நடமாட்டமில்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.