தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் வைத்து சட்டவிரோதமாக சாராய விற்பனை - பொதுமக்கள் எதிர்ப்பு - வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சட்டவிரோதமாக சாராய விற்பனை
சட்டவிரோதமாக சாராய விற்பனை

By

Published : May 18, 2022, 4:23 PM IST

மயிலாடுதுறை: காளி ஊராட்சி அக்ரகாரம் தெருவில் பல மாதங்களாக மது விற்பனை நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய ராஜேந்திரன், சாவித்திரி தம்பதியினர் வீட்டில் சட்டவிரோதமாக மதுவினை பதுக்கி வைத்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களிடம் விற்பனை செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் படுஜோராக மது விற்பனை நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சட்டவிரோதமாக சாராய விற்பனை

காலை முதல் இரவு வரை 24 மணிநேரமும் சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மது விற்பனை நடைபெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:மெரினாவில் சாராய விற்பனை: 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details