கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வேதாரண்யத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு உடனடியாக புதிய அம்பேத்கர் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவியது.
இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் வெண்கலத்தலான உலோகச் சிலையினை அமைக்க வேண்டுமென திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்பேத்கருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் திமுக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு மேலும், சிலையை அரசு செலவில் அமைக்க வேண்டும் எனவும், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து அமைதி நிலவ அனைத்து கட்சி, பொதுமக்கள் பங்கேற்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை அரசு சார்பில் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.