மயிலாடுதுறை:தரங்கம்பாடி வட்டம், பொறையாரைச் சேந்த சிறுவன் ஸ்டீபன் பாபு (14). ஸ்டீபன் பொறையாறில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவருக்கு காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தனது திறனை மேம்படுத்திக் கொண்டார்.
இது தவிர, பெயின்டிங், மெழுகு மற்றும் களிமண்ணால் ஆன கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு, காகிதம் மற்றும் சாக்பீஸ் கொண்டு பொருட்கள் தயாரிப்பது என்று பலவற்றையும் கற்றுக் கொண்டார். இவரது ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை பாபுகுமார் காட்போர்டைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை வாங்கித் கொடுத்துள்ளார்.
பஸ், கார், டிராக்டர், டெலிபோன், லாக்கர் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை முழுக்க, முழுக்க அச்சு அசலாக பல்வேறு அளவுகளில் உருவாக்கி, தகுந்த பெயின்டிங் செய்து அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் விரைவு பஸ்கள் (SETC), மகேந்திரா வேன் போன்றவற்றையும் அழகாக உருவாக்கியுள்ளார். இவரது திறமையைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் இவர் உருவாக்கிய பொருட்களை கண்காட்சியாகவும் வைக்க வாய்ப்பளித்தனர்.
படிப்பிலும் கெட்டிக்காரர்