தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ - The blockade of the District Collector's office

நாகப்பட்டினம்: 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

By

Published : Mar 10, 2020, 7:21 PM IST

Updated : Mar 10, 2020, 7:57 PM IST

100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரியும், தினக்கூலியை 250 ரூபாயிலிருந்து, 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 300க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை வாசலில் வைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் சமூக தணிக்கைகளில் உள்ள முறைகேடுகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் விவசாயிகள்

இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி தலைமையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, விவசாயத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் 10 பேர், 100 நாள் வேலை திட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டி மனு அளித்தனர்.

இதையும் படிங்க:வைகை ஆறு கால்வாயாக மாறும் - அதிர்ச்சித் தகவல்

Last Updated : Mar 10, 2020, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details