நாகப்பட்டினம் மாவட்டம் பெரம்பூரை அடுத்த வதிஷ்டாச்சேரி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவலர்கள் நிறுத்தியுள்ளனர்.
காரை நிறுத்திய நபர் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை சோதனையிட்டனர். சோதனையில் காரில் 900 லிட்டர்
சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து வக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.