தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது

மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் நேற்று நள்ளிரவு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் 9 பேரை கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 1:21 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கண்ணன்(31). இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும், மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து, கதிரவன் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 15 நாள்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11.40 மணியளவில் கண்ணன் தனது நண்பர்களுடன் வெளி்யே செல்கையில், கலைஞர் காலணியை சேர்ந்த கதிரவன், அஜித், திவாகர் அடங்கிய கும்பல் கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து, தலை, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினர்.

இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து கதிரவன் உள்ளிட்ட 20 பேரை தேடிவந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ்,ரஞ்சித், முருகவேல், கார்த்திக், துரை, குணசேகரன், பிரபாகரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஞ்சியவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் பாக்கம் சக்திவேல் மற்றும் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் மருத்துவமனை, காவல் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக்கொலை...

ABOUT THE AUTHOR

...view details