தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் 841 லிட்டர் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு - நாகையில் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு

கீழ்வேளூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயம் நீதிமன்ற உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.

சாராயம் தரையில் கொட்டி அழிப்பு
சாராயம் தரையில் கொட்டி அழிப்பு

By

Published : Feb 18, 2022, 7:50 AM IST

நாகப்பட்டினம்: கீழ்வேளூர் காவல் நிலையத்தில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதிகளில் இருந்து 841 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக கீழ்வேளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகை நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமான கோப்புகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நாகை மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் குணசேகரன் முன்னிலையில், காவல் துறையினர் 841 லிட்டர் சாராயத்தை கீழ்வேளூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் குழிவெட்டி அதில் கொட்டி அழித்தனர்.

இதையும் படிங்க:எதிலும் காதல்... ஆதரவு நாடும் தன்பாலின காதலர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details