மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா, தாளடி பயிர்கள் நடவு செய்துள்ளனர். பயிர்கள் நடவு செய்தபோது பெய்த பருவம் தவறிய மழை, வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் அளவிலான பயிர்கள் பாதிப்படைந்தன.
பின்னர் விவசாயிகள் மழையால் பாதித்த பயிர்களுக்கு உரமிட்டு காப்பாற்றி கதிர்வந்து முற்றும் நிலையில் உள்ளது. மேலும் முற்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
க
நெற்பயிர்கள் சேதமடைந்தது தொடர்பான காணொலி இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 3 நாள்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கழனிவாசல், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 8 ஆயிரம் ஏக்கர் அளவிலான சம்பா, தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளன. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் விவசாயிகள் மகசூல் பாதிப்படையும் என வேதனையடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு மூன்றாவது முறையாக விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதால் தமிழ்நாடு அரசு சம்பா, தாளடி பயிர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை நிவாரணமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆங்கில புத்தாண்டு; வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்