தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி - மயிலாடுதுறையில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

7-person-possitive-cases-in-nagapattinam
7-person-possitive-cases-in-nagapattinam

By

Published : Apr 16, 2020, 10:17 AM IST

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டிற்கு சென்றவர்களில் பலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது.

அந்த வகையில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில்லிருந்து 12 பேர் தாமாக முன்வந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வார்டில் தங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

அவர்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டவர்களில் நான்கு பேருக்கு ஆய்வு முடிவுகள் வந்து கரோனா நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா சிகிச்சை வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் உள்ள ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த ஐந்து பேர், மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாவில் தலா ஒருவர் என மொத்தம் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சமய மாநாடு சென்றுவந்த திருமங்கலத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா: 3 வார்டுகள் அடைப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details