தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்தநாளை முன்னிட்டு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிய சிறுமி - மயிலாடுதுறை கலைத்தாய் அறக்கட்டளை

நாகப்பட்டினம்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பிறந்தநாளை முன்னிட்டு தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை மயிலாடுதுறையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவியாக வழங்கினார்.

பள்ளி மாணவி உதவி
பள்ளி மாணவி உதவி

By

Published : Aug 25, 2020, 6:52 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளராக பணியாற்றுபவர் பால்ராஜ். இவரது மகள் மினர்வாலக்னோ 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஓராண்டாக உண்டியலில் தான் சேர்த்து வைத்த ரூ.4 ஆயிரத்தை, மயிலாடுதுறையில் உள்ளகலைத்தாய் அறக்கட்டளையின் நாட்டுப்புறக் கலைஞர்கள்ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, மளிகை பொருள்களை வாங்குவதற்காக வழங்கினார்.


இச்சிறுமியின் உதவும் மனப்பான்மையை பாராட்டிய நாட்டுப்புறக் கலைஞர்கள் சிறுமிக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details