தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதிவானதைவிட கூடுதலாக 50 வாக்குகள் - நள்ளிரவில் நாதக போராட்டம்

மயிலாடுதுறை: பதிவான வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக கணக்கு காண்பிக்கப்பட்டதற்கு முறையாக விளக்கம் அளிக்காத தேர்தல் அலுவலர்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.

ntk
ntk

By

Published : Apr 7, 2021, 10:44 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாவடுதுறை அரசு உயர்நிலைப்பள்ளியில், 175வது வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 827 வாக்குகளில், 578 வாக்குகள் நேற்று பதிவாயின. ஆனால் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கணக்கிட்ட போது, 628 வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பதிவான மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக இருந்ததால், நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதில் நடைபெற்ற கோளாறு காரணமாக கூடுதல் வாக்கு பதிவானதாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், மாதிரி வாக்குப்பதிவு ஆதார சீட்டில் கட்சிகள் வாக்களித்ததை குறைத்து கணக்கிட கோரினார். ஆனால் அதனை ஏற்க மறுத்ததோடு, நாம் தமிழர் கட்சியினரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்களைக் கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பதிவானதைவிட கூடுதலாக 50 வாக்குகள் - நள்ளிரவில் நாதக போராட்டம்

அதன்பின்னர், பதிவான வாக்குகளைவிட கூடுதலாக 50 வாக்குகள் பதிவானதற்கு விளக்கமளிக்காத தேர்தல் அதிகாரிகளை கண்டித்தும், மறுவாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இவிஎம் இயந்திரம் பழுது ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில், 7மணி நேரமாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு நாம் தமிழர் கட்சியினர் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கோவையில் பாதுகாப்பு அறையைப் பார்வையிட்ட கமல்

ABOUT THE AUTHOR

...view details