தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி: விவசாயிகள் வேதனை!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை சீர்காழி தாலுகாவில் ஆறாவது நாளாக தொடரும் கனமழையால் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

By

Published : Dec 7, 2020, 10:27 PM IST

கனமழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்
கனமழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா முழுவதும் ஆறாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வடிகால் வாய்க்கால் வழிந்து, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், கீரங்குடி, கொண்டல், மாதானம், ஆச்சாள்புரம், மதிரவேளூர், சோதியகுடி, எடமணல், திட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6ஆவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய விளைநிலங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனால், சுமார் 50ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இங்குள்ள வடிகால் வாய்க்காலில் தண்ணீர் வழிந்து விளைநிலத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிகால் வசதிகள் முறையாக தூர்வாராமல் இருப்பதால் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும், தண்ணீர் வடிவதற்கும் வழி இல்லாததால் வயல் நிலங்களிலேயே தண்ணீர் தேங்கியுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்

இதனால், அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீர்காழி தாலுகா முழுவதும் 50 நகர் பகுதிகள், 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேங்கிய வெள்ளத்தில் போட்டிங்... வைரலாகும் சிறுவர்களின் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details