தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு - 50 crows three dog death at nagapattinam

நாகப்பட்டினம்: 50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்திருப்பது பூம்புகார் கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

crows
crows

By

Published : Apr 23, 2020, 1:14 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவ கிராமத்தில் பறந்துகொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென கீழே விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதேபோல மீனவர் காலனி பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று நாய்களும், தெருக்களில் இறந்துகிடந்தன. இதனைக்கண்ட மீனவ கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

50-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த புகாரின் பேரில் பூம்புகார் கால்நடைத் துறை அலுவலர்கள், காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காகங்களுக்கும், நாய்களுக்கும் ஏதேனும் உணவில் விஷம் வைத்து கொள்ளப்பட்டனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:உணவில்லாமல் அவதி: குரங்குகளின் பசியை போக்கிய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details