மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நான்கு நாள்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள், நெற்பயிரில் தண்ணீரில் மூழ்கியது. இன்று மதியம் (டிச.05) முதல் மழை படிப்படியாக குறைந்து இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சீர்காழி அருகே வடரங்கம், கொண்டல் கிராமத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் இங்குள்ள தெற்கு ராஜான் வாய்க்கால், உப்பனாறு ஆகியவைகளில் தண்ணீர் வழிந்து விளைநிலம் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.