சென்னை:அதிமுக கழக அமைப்புக்கான தேர்தல் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் விருப்பமனு பெரும் நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் கோ.சூரியமூர்த்தி ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
இதில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ் மனுதாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் பவுன்ராஜுக்கு ஆதரவாக எட்டு பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதேபோல், மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரங்கநாதன், நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒன்றாக சேர்ந்து பேரணியாக வந்து மனுதாக்கல் செய்தனர்.