கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேரந்த மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், ஐந்து படகுகளில் கேரளாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், கடந்த 10ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனிடையே கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையறியாத மீனவர்கள், மீன் பிடித்துவிட்டு கொச்சின் துறைமுகத்திற்கு திரும்பியபோது, வெளிமாநில மீனவர்கள், படகுகள் இங்கு இருக்கக்கூடாது எனக் கூறியுள்ளனர். இதில் செய்வதறியாது திகைத்த மீனவர்கள் 46 பேரும் ஐந்து படகை எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டனர். இதில், படகில் இருந்த எரிபொருள் தீர்ந்ததால் பாம்பன் அருகே ஐந்து படகுகளும் நடுக்கடலில் நின்றனது.