மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.