நாகப்பட்டினம் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு விசைப்படகு மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் கடத்தப்படவிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்த தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், மீன்பிடி விசைப்படகு ஒன்றின் ஐஸ் பெட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்ச மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் சிலம்பு, நிவாஸ், ஜெகதீசன், சரவணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை 400 கிலோ என்பதும் அதன் மதிப்பு ரூ. 4 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு, நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்