மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அபிஷேக் (30) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது காரில் நான்கு கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசுகளை பாலிஷ் போடுவதற்காக இன்று காலை சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அபிஷேக்கின் காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற நகை - பணம் பறிமுதல் - உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற நகை
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள், ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
![உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற நகை - பணம் பறிமுதல் anklets](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10905809-thumbnail-3x2-yau.jpg)
வெள்ளி கொலுசுகள்
அவரிடமிருந்த நகை மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். இவைகள், சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தாருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த பறக்கும் படை