தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை - 4 பேர் கைது - Crime news

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்தனர்.

ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை
ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை

By

Published : Nov 6, 2021, 4:10 PM IST

மயிலாடுதுறை:மேலப்பட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் (நவ.04) மாலை மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சதீஷை கத்தியுடன் விரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து வயல்வெளிக்குள் சதீஷ் ஓடியபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற கும்பல் சதீஷின் நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாடுதுறை காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

குற்றவாளிகள் கைது

விசாரணையில், கொலை செய்யப்பட்ட சதீஷின் ஒன்றுவிட்ட சகோதரர் மகன் வினோத் என்பவர், பழனிவேல் என்பவரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இப்பிரச்சினையால் சதீஷ், பழனிவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கொலை வரை சென்றிருப்பது தெரிகிறது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மாதவன் (33), இளவரசன் (27), பிரபு (38), ரகு (24) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடி தலைமறைவாகவுள்ள தினேஷை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 5 கோடி மோசடி - அதிமுக ஊராட்சி மன்றத்தலைவருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details