தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்துத் தகராறில் எரிகளைக் கொல்லி மருந்து தெளித்து 4 ஏக்கர் பயிர் நாசம் - நாகை மாவட்ட செய்திகள்

நாகை: சொத்துத் தகராறில்  வயலுக்கு எரிகளைக் கொல்லி மருந்து தெளித்ததால் நான்கு ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் கருகி நாசமாகின.

4 acres of crops land destruction for using pesticides
எரிகளைக்கொல்லி மருந்து தெளித்து 4 ஏக்கர் பயிர் நாசம்

By

Published : Dec 14, 2019, 10:08 PM IST

நாகை மாவட்டம், நுகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாண்டியன். அவரது நான்கு ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருந்தார். பாண்டியனுக்கும் அவருடைய சித்தப்பாவிற்கும் இடையே ஏற்பட்ட சொத்துத் தகராறில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாண்டியனுடைய வயலில், கொடிய விஷம் கொண்ட எரிகளைக் கொல்லி மருந்தினை தெளித்துள்ளனர்.

இதன் காரணமாக, கதிர்வரும் பருவத்தில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் கருகி நாசமாகின. இதையடுத்து, வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தது தனது சித்தப்பாதான் என்று கீழ்வேளூர் காவல் நிலையத்தில் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வேணுகோபாலின் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வேணுகோபால், மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் செல்வம், செந்தில் ஆகியோரையும் தேடிவருகின்றனர்.

கடந்த ஆண்டே நிலத்தகராறில் பாண்டியனுடைய நிலத்தில் பூச்சி மருந்துகளைத் தெளித்ததாக புகார் கொடுத்தும், விசாரணைகள் மேற்கொள்ளாத நிலையில், மீண்டும் இந்த வருடம் அதேபோன்ற செயல் நடைபெற்றுள்ளதாக பாண்டியன் வருத்தம் தெரிவித்தார்.

எரிகளைக்கொல்லி மருந்து தெளித்து 4 ஏக்கர் பயிர் நாசம்

மேலும் தன்னையும், தனது குடும்பத்தினரையும், கொலை செய்துவிடுவதாக வேணுகோபால் மிரட்டிவருவதாகவும், தனது குடும்பத்தினருக்கும், வயலுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் அவர் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்காச்சோளத்தில் படைப்புழு: கட்டுப்படுத்தும் மருந்து தெளிப்பின் செயல்விளக்கம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details