மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில கொள்கை விளக்க அணி தலைவர் பாரி மோகன் பேசுகையில்; ‘தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த பிறகு உயர் படிப்பை படிப்பதற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது எத்தனையோ எதிர்ப்புகளை மீறி இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார்’. அன்று தாழ்த்தப்பட்ட சமுதாய ஆணைய தலைவர் தலைமையில் சென்னையில் அன்புமணி ராமதாஸுக்கு விழா எடுக்கப்பட்டது திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் அவரை வாழ்த்தினார்கள்.
மேலும், தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக இல்லை அது வணிகமயமாகி நீண்ட நாட்கள் ஆகிறது இதற்காக அதிக அளவிலான போராட்டங்களை மருத்துவர் ஐயா நடத்தி வந்தார். நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் போராட்டம் கல்வி கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த கல்வி கட்டணக் குழு நியமிக்க வேண்டி போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டு உள்ளார். ஐயா போராட்டம் அறிவித்தால் கலைஞர் அந்தப் போராட்டத்திற்கான குழுவை நியமித்து விடுவார். சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது ஐயா தான். சமச்சீர் கல்வியின் அறிக்கை வந்து நீண்ட நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது ஐயா மாணவர் சங்கத்தை அழைத்து போராட்டத்தை அறிவிக்கும் படி கூறினார். போராட்டம் நடைபெற்றது உடனடியாக கலைஞர் அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. ஐயா போராட்டம் நடத்தினால் அதன் விளைவு என்னவென்று கலைஞருக்கு தெரியும்.
ஜெயலலிதா இருக்கும் காலத்தில் அனைத்து கட்சிகள் சேர்ந்து நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் போராட்டம் நடைபெற இருந்த நாளுக்கு முதல் நாளே நுழைவுத் தேர்வு ரத்து என்று அறிவிப்பு வெளிவந்தது. இதற்கு முழு காரணம் மருத்துவர் ஐயா தான் என தெரிவித்தார்.