மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி மேட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்தியா(35.) இவரது கூரைவீடு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயானது முழுவதும் பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதன்காரணமாக வீட்டில் இருந்த மூன்று லட்சம் மதிப்பிலான பணம், நகை, வீட்டு உபயோக பொருட்கள், பட்டுபுடவைகள் எரிந்து நாசமானது.
தீப்பிடித்து சேதமடைந்த கூரை வீடு; நிவாரணம் அளித்த அதிமுக - Nagapattinam district
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே கூரை வீடு தீப்பிடித்து மூன்று லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
3 lakh worth of goods were damaged as the house caught fire
பின்னர் தகவலறிந்து வந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். உடனடியாக அரசு நிவாரண உதவியாக ஐந்து கிலோ அரிசி, 5,000 ரொக்கத்தை வருவாய்துறையினர் வழங்கினர். மேலும் அதிமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் ரொக்கம், ஒரு மூட்டை அரிசி பையினையும் வழங்கினார். இது குறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.