தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்.. சீர்காழி கோட்டாட்சியர் விசாரணை! - mayiladuthurai suicide

மயிலாடுதுறை அருகே காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்ட இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

a graduate women suicide
பட்டதாரி இளம்பெண் மர்மமான முறையில் தற்கொலை

By

Published : Jul 31, 2023, 8:27 AM IST

Updated : Jul 31, 2023, 9:13 AM IST

மயிலாடுதுறை:தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை மகள் கனகலட்சுமி(29). எம்.இ (ME) பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதி நேர வாகன ஓட்டுனரான சக்திவேல்(32) என்பவரை காதலித்து வந்துள்ளார். கனகலட்சுமியின் தாய் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சக்திவேலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால், அவர்கள் பெற்றோரை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்த வாழ சக்திவேல் வீட்டில் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் எதிர் எதிர் வீட்டில் வசித்து, பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து, கனகலட்சுமி குடும்பத்தார் சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி (ஆவணி 3) முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்லதுரை விவசாய வேலைக்காக வெளியில் சென்றுவிட்டதால் கனகலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலைமுடித்து விட்டு செல்லதுரை வீடுதிரும்பிய போது, கனகலட்சுமி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். நேற்று மதியம் சக்திவேல் சிலருடன் வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் சக்திவேல் தன்மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், தனது மகள் இதுவரை 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் இறந்த பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கனகலட்சுமியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதன் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக 174 வழக்குப்பதிவு செய்து கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பதிவுத் திருமணம் நடைபெற்று 7 வருடங்கள் நிறைவடையாததால் இச்சம்பவம் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தற்போது திருமணமாகி 5 வருடங்களாகியும் கணவரோடு சேர்ந்து வாழாத இளம் பட்டதாரிபெண்ணுக்கு அடுத்த மாதம் முறைப்படி திருமணம் நடைபெற்று கணவருடன் சேர்ந்து வாழ இருந்த நிலையில், மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்.. இருவருக்கு அரிவாள் வெட்டு மயிலாடுதுறையில் பரபரப்பு!

Last Updated : Jul 31, 2023, 9:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details