சீர்காழியில் 28ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாணம் மயிலாடுதுறை:சீர்காழி அருகே தென்பாதியில் உள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 28ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு இன்று (டிச.18) வெகு விமரிசையாக நடந்தது.
இன்று காலை தென்பாதி விநாயகர் ஆலயத்தில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசைப் பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது. அதன்பின்னர், நடந்த ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி கோலாட்டம் மற்றும் நடனத்துடன் ராதா கல்யாண விழா களைகட்டியது. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கல வாத்தியங்கள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது.
பின்னர், சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதனை அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: தொழில் பூங்கா விவகாரம் - நீலகிரி எம்.பி.ஆ. ராசா விவசாயிகளுடன் பேச்சு... போராட்டம் நிறுத்திவைப்பு