தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பறக்கும்படையினரால் 21 டன் வெங்காயம் பறிமுதல் - Police seized 21 tonnes of onion loaded without proper documentation

நாகப்பட்டினம்: சீர்காழியில் உரிய ஆவணமின்றி 21 டன் வெங்காயம் ஏற்றிவந்த லாரியை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

21 tonnes of onion seized  in Sirkazhi
21 tonnes of onion seized in Sirkazhi

By

Published : Dec 22, 2019, 3:16 PM IST

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினரும் காவல் துறையினரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் உரிய ஆவணங்களின்றி வெங்காயம் ஏற்றிவந்த லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் காவல் துறையினரின் விசாரணையில், லாரியானது மகாராஷ்டிரா மாநிலம் சோழப்பூரிலிருந்து 12 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 21 டன் அளவிலான வெங்காயத்தை ஏற்றிவந்தது தெரியவந்தது.

சீர்காழியில் தேர்தல் பறக்கும்படையினரால் 21 டன் வெங்காயம் பறிமுதல்

தொடர்ந்து காவல் துறையினர் லாரி ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி, கிளீனர் நந்தகுமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

டெல்லியில் நாளை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details