மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி மக்களுக்கு கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளைக் கடைபிடிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுபிரசுரங்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு முன்னெடுத்து, 20 ஆயிரம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, மயிலாடுதுறை பேருந்து நிலையம், கடை வீதி மற்றும் நகரமெங்கும் விநியோகிக்க பணிகள் நடந்தன.
கரோனாவைக் கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய 20,000 துண்டுபிரசுரங்கள் விநியோகம் - கரோனாவை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருகிவரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி 20 ஆயிரம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரோனாவை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வலியுறுத்தி 20,000 துண்டுபிரசுரங்கள்
மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செந்தில்வேல் தலைமையில் இன்று (செப்.03) நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மன்னம்பந்தல் தனியார் கல்லூரி என்சிசி மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.