தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையிலிருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு! - Paddy grinding

மயிலாடுதுறை: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெல் அரவை  மயிலாடுதுறையிலிருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு  தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிபக்கழகம்  Tamil Nadu Consumer Goods Corporation  Paddy grinding  2000-ton paddy despatch for grinding from mayiladurai
2000 ton paddy despatch for grinding from mayiladurai

By

Published : Nov 30, 2020, 10:57 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகள் தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிபக்கழகத்தினர் பல்வேறு கிடங்குகளில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படும்.

அந்த நெல் மூட்டைகளை அரவை மில்லுக்கு அனுப்பி அவற்றை அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு விநியோகத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுக்காக்களில் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 52 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் ஏற்றினர். இந்த நெல் மூட்டைகள் மதுரையில் உள்ள அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:நெல் கொள்முதல் நிலையத்தில் கணக்கில் வராத 1.07 லட்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details