நாகப்பட்டினம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியது. இதில், சம்பா அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில் நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த திருப்பூண்டி, சன்னமங்கலம், காடம்பாடி, அருந்தவன்புலம், கொத்தங்குடி, சாட்டியக்குடி, ஆயக்காரன்புலம், சாட்டியகுடி உள்ளிட்ட பகுதிகளில் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பா நெல் மூட்டைகளை ரயில் மூலம் 2000 மெட்ரிக் டன் அனுப்பி வைப்பு! - Nagai district sent by train!
நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகளை ரயில் மூலம் 2000 மெட்ரிக் டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சன்ன ரகத்தை ரயில்களில் 120 லாரிகள் மூலம் 2000 டன் நெல்லை சரக்கு ரயிலில் ஏற்றி சென்னை ராயபுரம், காஞ்சிபுரம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி சேமிப்பு கிடங்கில் வைத்துள்ளது. பின்னர், அங்கிருந்து தனியார் அரவை மில் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு, அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தேர்தல் முதன்மைத் தகவல்கள்: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு