அலுவலர்களின் அலட்சியத்தால் வீதியில் கிடக்கும் பல ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ! - 200 lorry holding
நாகப்பட்டினம்: நுகர்பொருள் வாணியக் கழக அதிகாரிகளின் அலட்சியத்தால் நாகையில் 200 லாரிகளில் ஏற்றி வரப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் இறக்க முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட பல லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நெல்மணிகளை அரைப்பதற்காக அங்கிருந்து ரயிலிலும், லாரிகளிலும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாகை, திருப்பூண்டி, கீழ்வேளூர், கீழையூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் மூட்டைகள் ஒட்டுமொத்தமாக நாகையில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் இறக்குவதற்கு போதிய இடங்கள் இருந்தும், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களின் அலட்சியத்தால் நெல் மூட்டைகளை இறக்க விடாமல், தரகுத் தொகைக்காக அவர்களைக் காத்துக் கிடக்க வைக்கின்றனர்.