தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவுக்குலாம் பிரியாணி காத்திருக்காது... விருந்து நடத்திய இளைஞர்கள்! - தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம்

நாகை: சீர்காழியில் ஊரடங்கை மீறி கறி விருந்து சாப்பிட்ட 20 இளைஞர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : May 28, 2020, 3:38 PM IST

Updated : May 28, 2020, 4:19 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் சுமார் 50 நாள்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த 20 இளைஞர்கள் வாழை தோப்பில் கோழி கறி பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சாப்பிடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விருந்தில் அமர்ந்துள்ள ஒரு இளைஞர், நாகை மாவட்ட காவல் துறையால் வழங்கப்பட்ட போலீஸ் நண்பர் சீருடை அணிந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படிங்க:சீர்காழியில் அடுத்தடுத்து இருவருக்கு அரிவாள் வெட்டு!

Last Updated : May 28, 2020, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details