கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் சில விதிமுறைகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அத்தியாவசிப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், கால அவகாசம் முடிந்தும் கடையை திறந்துவைத்தல் உள்ளிட்ட விதி மீறல் காரணமாக பல கடைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துவருகிறது.
அதன்படி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்றக் கடைகள் மூடி வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. அதனால் மயிலாடுதுறையில் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதையடுத்து மாயிலாடுதுறை நகர் பகுதிகளில் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் நகராட்சித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.