மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நவம்பர் 2ஆம் தேதி ஒரு வீட்டின் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில், இறந்து போன பச்சிளம் ஆண்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததும், அதனை அந்த சிறுமியே யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்ததும் தெரியவந்தது.
சிறுமியிடம் விசாரணை
தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்ற இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்ததும், அவர் சிறுமியிடம் ஆசைக் வார்த்தைகூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.