மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் 16ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சென்னை நாட்டியக்கூடம் குழுவினர், ஸ்ரீ ந்ருத்யாலயா அகாதமி குழுவினர், மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் நுண்கலைப் பயிற்சியகக் குழுவினர், சென்னை லட்சுமி கலாகேந்தரம் குழுவினர், ந்ருத்யாப்யாசா அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் குழுவினர், நாட்டியதிருத் அகாதமி ஆஃப் பரதநாட்டியம் ஆகிய குழுவினரின் பரதநாட்டியம், நாட்டிய நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.