சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நில கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குச் சீல்வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், நாகப்பட்டினம், திருமருகல், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட 16 இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்துவந்த நிறுவனங்களுக்குச் சீல்வைக்கப்பட்டது.
இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால், நாகை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி சீல் வைக்கப்பட்ட 16 நிறுவன உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.